fbpx
Others

கர்நாடகம்-பா.ஜனதா அரசின் 3 ஆண்டுகள் சாதனை விளக்கமாநாடு

பெங்களூரு: கர்நாடகத்தில் பா.ஜனதா அரசின் 3 ஆண்டுகள் சாதனை விளக்க மாநாடு தொட்டபள்ளாபுராவில் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இதுகுறித்து சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தொட்டபள்ளாபுராவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- சிறப்பான திட்டங்கள் கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு அமைந்து 3 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி பா.ஜனதா அரசின் சாதனைகளை மக்களுக்கு விவரிக்கும் நோக்கத்தில் “ஜனஸ்பந்தன” என்ற பெயரில் சாதனை விளக்க மாநாடு தொட்டபள்ளாபுராவில் நாளை (இன்று) நடக்கிறது. இதில் பா.ஜனதா தொண்டர்கள் 3 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள். 2 ஆண்டுகள் எடியூரப்பா முதல்-மந்திரியாக சிறப்பான திட்டங்களை அமல்படுத்தினார். கடந்த ஓராண்டாக பசவராஜ் பொம்மை சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்த மாநாட்டிற்கு பெங்களூரு, பெங்களூரு புறநகர், கோலார், சிக்பள்ளாப்பூர், துமகூரு மாவட்டங்களை சேர்ந்த கட்சி தொண்டர்கள் வருவார்கள். மாநிலத்தின் 6 இடங்களில் இத்தகைய மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம்போக்குவரத்து நெரிசல் 40 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 3 லட்சம் பேருக்கு உணவு வசதி செய்யப்பட்டு வருகிறது. இதற்காக 2 நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கியுள்ளோம். காய்கறி பலாவ், தயிர் சாதம், ஒரு இனிப்பு போன்றவை வழங்கப்பட உள்ளது. பஸ் மற்றும் கார்கள் நிற்க 200 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மூன்று முறை மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதை நாங்கள் வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளோம். விவசாயிகளின் குழந்தைகளுக்கு உயர்கல்வி படிக்க வித்யாஸ்ரீ திட்டம் அமல்படுத்தியுள்ளோம். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு 75 யூனிட் வரை இலவசமாக மின்சாரம் வினியோகம் செய்கிறோம். உறுதியாகவில்லை உள்கட்டமைப்பு வசதிகளை 7 மடங்கு அதிகரித்துள்ளோம். அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள் பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வு கண்டுள்ளோம். இந்த மாநாட்டில் எங்கள் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொள்வது பற்றி இன்னும் உறுதியாகவில்லை. ஆனால் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி கலந்து கொள்கிறார். கர்நாடக தலைவர்கள் பங்கேற்கிறார்கள்..

Related Articles

Back to top button
Close
Close