fbpx
RETamil Newsஅரசியல்தமிழ்நாடு

இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்ட திருவாரூர் தொகுதி மக்களுக்கும் பொங்கல் பரிசு-தமிழக அரசு அறிவிப்பு !

இன்று திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக திருவாரூர் தொகுதி மக்களின் குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசாக ரூ. 1000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

திமுக வின் முன்னாள் தலைவர் கருணாநிதியின் மறைவையடுத்து காலியாக இருந்த திருவாரூர் சட்டசபை தொகுதிக்கு ஜனவரி 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூரில் இன்னும் நிவாரண பணிகள் முழுமையாக முடிவடையவில்லை என்றும், மக்கள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்றும், எனவே திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

இந்த நிலையில், திருவாரூர் தொகுதிக்கு அறிவிக்கப்பட்டு இருந்த இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இடைத்தேர்தல் பணிகளை நிறுத்துமாறு தமிழக தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

 

தமிழக அரசு தேர்தல் நடத்தை விதிமுறைகளின் படி சமீபத்தில் அறிவித்த பொங்கல் ரொக்கப்பரிசு ஆயிரம் ரூபாய் திருவாரூர் தொகுதிகுட்பட்ட மக்களுக்கு பின்னர் அளிக்கப்படும் என அறிவித்திருந்தது.

ஆனால், தற்போது அங்கு இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதால், இன்று முதல் அளிக்கப்படவுள்ள பொங்கல் ரொக்கப்பரிசு ரூ. 1000 திருவாரூர் தொகுதிக்குட்பட்ட மக்களுக்கும் சேர்த்து வழங்க தமிழக அரசு தீர்மானித்துள்ளது.

Related Articles

Back to top button
Close
Close