fbpx
Others

நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கியது..,அவையில் பரபரப்பு..

* 3 மடங்கு அதிகமாக உழைப்போம் மோடி பேட்டி   நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி அளித்த பேட்டியில், ‘‘நாட்டு மக்கள் எதிர்க்கட்சிகளிடம் இருந்து நல்ல நடவடிக்கைகளை எதிர்பார்க்கின்றனர். நாடகங்களையோ, இடையூறுகளையோ விரும்பவில்லை. நாட்டுக்கு ஒரு நல்ல எதிர்க்கட்சி, பொறுப்புள்ள எதிர்க்கட்சி தேவை. மக்களுக்கு கோஷங்கள் தேவையில்லை, வாழ்வாதாரம் தேவை. இந்த 18வது மக்களவையில் வெற்றி பெற்ற எம்பிக்கள் சாமானியர்களின் இந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முயற்சிப்பார்கள் என நம்புகிறேன். 3வது பதவிக்காலத்தில், நாங்கள் இன்னும் 3 மடங்கு அதிகமாக உழைப்போம் என்று நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன்’’ என்றார். * அவதேஷுக்கு முக்கியத்துவம் மக்களவையில்   எதிர்க்கட்சி எம்பிக்கள் அமர்வின் முதல் வரிசையில் ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ், திரிணாமுலின் கல்யாண் பானர்ஜி ஆகியோருடன், அவதேஷ் பிரசாத்துடம் இடம் பெற்றிருந்தார். சமாஜ்வாடியை சேர்ந்த இவர் அயோத்தியை உள்ளிடக்கிய பைசாபாத் தொகுதியில் பாஜ எம்பி லல்லு சிங்கை 54,567 ஓட்டு வித்தியாசத்தில் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. கவுரவப் போரில் வெற்றி தேடித் தந்ததற்காக அவதேஷுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. ஆளுங்கட்சி தரப்பில் மக்களவை முன்னாள் சபாநாயகர் ஓம்பிர்லா 3வது வரிசையிலும், இமாச்சலின் மண்டி தொகுதி பாஜ எம்பியும் நடிகையுமான கங்கனா ரனாவத் 8வது வரிசையிலும், டிவி தொடரில் ராமராக நடித்த மீரட் தொகுதி பாஜ எம்பி அருண்கோவில் 9வது வரிசையிலும் அமர்ந்திருந்தனர்.

Related Articles

Back to top button
Close
Close